தையிட்டி தனியார் காணி பௌத்த விகாரையை உடனடியாக அகற்ற கோரி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்

Date:

இலங்கை இராணுவத்தினரால் சட்டவிரோதமாக தமிழரின் பூர்வீக நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையை நீக்க கோரி பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் முன்பாக மாபெரும் போராட்டமொன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

எமது தாயக நிலப்பரப்பான யாழ்ப்பாணம் – தையிட்டியில் தனியாருக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாயகத்தில் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவை உலக நாடுகளுக்குத் தெரிவிக்கும் வகையில் இந்த மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றதுடன், இதனை  ‘தமிழீழ சுயநிர்ணய அமைப்பு’ ஏற்பாடு செய்திருந்தது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போதும் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இந்த விகாரை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரித்தானியாவில் இந்தப் போராட்டம் நடைபெற்றதுடன், சர்வதேச நாடுகள் ஈழத் தமிழர்களுக்கான நீதிக்கான போராட்டத்தை திறந்த மனதுடன், பார்க்க வேண்டும் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் வலியுறுத்தினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...

NDB ஊழல், கைதானவர் விளக்கமறியலில்

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) தரவு அமைப்பிற்குச் சட்டவிரோதமாக ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...