நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது அமைச்சரவையின் அர்ப்பணிப்பை பொது சேவையில் உள்ள அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார்.
“இன்று நமக்கு இருக்கும் உணர்வும் ஆர்வமும் பொது சேவையில் உள்ள ஒவ்வொருவராலும் உணரப்பட வேண்டும். தூய்மையான இலங்கை திட்டம் என்று பெயரிட்டாலும் பரவாயில்லை, டிஜிட்டல் பொருளாதாரம் என்று பெயரிட்டாலும் பரவாயில்லை, தோழர் அனுரவின் அர்ப்பணிப்பால் மட்டும், அமைச்சரவையில் உள்ள எங்களால் மட்டுமே இதைச் செய்ய முடியாது. அதைச் செய்ய, நாம் அனைவரும் கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பழைய ஆடைகளைக் கழற்றிவிட்டுப் புதிய ஆடைகளை போடப் பழகிக்கொள்ள வேண்டும்.”
நேற்று (மார்ச் 05) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இவ்வாறு தெரிவித்தார்.