விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான வழக்கு இன்று (03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
மாத்தறை வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், கடந்த 20 ஆம் திகதி மாத்தறை நீதிமன்றத்தால் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இன்றைய தினம் அவருக்கு பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.