மாத்தறை சிறைச்சாலையில் நேற்று (ஏப்ரல் 22) மதியம் இரண்டு கைதிகள் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல், நேற்று இரவு மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
அதன்படி, போலீசார் கண்ணீர் புகை குண்டு தாக்குதலையும் நடத்தினர், மேலும் நேற்று நள்ளிரவு நிலமையைக் கட்டுப்படுத்த காவல்துறை சிறப்புப் படையினரையும் அழைத்தனர்.
நேற்று மாலை மாத்தறை சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் வேறொரு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஒரு வார்டில் இருந்து வெளியே வந்த கைதிகள் குழு ஒன்று எதிர்ப்புத் தெரிவித்து, அநாகரீகமாக நடந்து கொண்டபோது இந்த நிலைமை ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகளும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.