அடுத்த வாரம் தன்னை கைது செய்யப்படுவதற்குத் தயாராகி வருவதாகத் தகவல் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக போலியான ஆதாரங்களைத் தயாரித்து தன்னைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரின் நலனைக் கண்டறிய வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அதன்படி, அடுத்த வாரம் முதல் அவர்களுடன் இணைய வாய்ப்பு இருப்பதாக எம்.பி. கூறியுள்ளார்.