ரணில்-தமுகூ திடீர் சந்திப்பு!

0
437

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினர் இடையில் திடீர் சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பெயரில் அவரது ஃப்ளவர் வீதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக அதன் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதில் ஒத்துழைப்பது பற்றி உரையாடல் இடம் பெற்தாக கூட்டணி தரப்பில் தெரிவிக்கபட்டது.

ரணில் விக்கிரமசிங்க நாளை ரஷ்யா செல்ல உள்ளதால் இந்த சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யபட்டதாக கூறிய கூட்டணி தரப்பு, உள்ளூராட்சி மன்ற விவகாரம் தவிர்த்த ஏனைய விடயங்கள் உரையாடபட்டனவா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here