நுவரெலியாவில் மலர்கிறது இதொகா – என்பிபி ஆட்சி!

Date:

நுவரெலியா மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை தீர்மானித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபை இன்று கொட்டைகலையில் உள்ள காங்கிரஸ் தொழில்நுட்ப வளாகத்தில் கூடியது. இக்கூட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை உறுப்பினர்களுடன் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னிலை பெற்ற சபைகள் உட்பட நுவரெலிய மாவட்டத்தின் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை பெற்ற கட்சிகளின் உறுப்பினர்களின் தொகை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை அமைத்துக் கொள்வதே பொருத்தமானது என்ற கருத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...