மூன்று பொலீசார் பணி நீக்கம்

Date:

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த மூவருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். 

கடந்த 23 ஆம் திகதி கொழும்பு மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 11,320 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளுடன் ஒருவரைக் கைது செய்தனர். 

குறித்த நபரை சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த கையடக்க தொலைபேசியில் மேற்படி பொலிஸ் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மற்றும் குரல் பதிவுகள் இருப்பது தெரியவந்தது. 

இதன் காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரருக்கு உதவிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட மூன்று கான்ஸ்டபிள்களும் 22, 30 மற்றும் 32 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. 

கொழும்பு மத்திய குற்றத் தடுப்புப் பிரிவினரால் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இ.தொ.கா தலைவர் உள்ளிட்ட குழு ஜப்பான் தூதுவரை சந்தித்து பேச்சு

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ ஐசோமாட்டா (Akio ISOMATA) நுவரெலியாவிற்கு...

பொரளை விபத்துக்கு காரணம் கஞ்சா!

பொரளை, கனத்த சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக...

பொரளை விபத்தில் ஒருவர் பலி

பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை (29)...