இளைஞர் கழகங்கள் JVP அரசியல் பிடிக்குள்

Date:

நீண்ட காலமாக, நமது நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு இனம், மதம், சாதி, வர்க்கம் மற்றும் கட்சி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தந்த இளைஞர் கழங்கள் இப்போது முழுமையாக அரசியல்மயமாக்கப்பட்டு, தற்போதைய அரசாங்கத்தின் பகடைக்காயாக மாற்றப்பட்டு, ஜே.வி.பி.யின் அரசியல் பிடியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Citizen Voice வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (10) இளைஞர் சம்மேளன உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இளைஞர் கழகங்கள் சோசலிச இளைஞர் சங்கம் என்ற அரசியல் அமைப்பின் பணயக்கைதிகளாக மாறிவிட்டது. பிரதேச மட்டம், மாவட்ட மட்டம் மற்றும் தேசிய மட்டம் என்ற அடிப்படையில் செயல்பட்ட இளைஞர் சம்மேளனங்கள், இன்று இளைஞர் யுவதிகளின் ஆற்றல் திறமைக்கு இடம்கொடுக்காமல் ஜேவிபியின் ஆதிக்கத்திற்குட்பட்டுள்ளன. நியமிக்கப்படவுள்ள தேசிய இளைஞர் சம்மேளன தெரிவில் ஆளும் தரப்பினரின் அரசியல் ஆதரவாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரச அதிகாரம், அரசாங்கத்தின் அதிகாரம், அமைச்சு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர், அதிகாரிகள் போன்றவற்றின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இளைஞர்கள் மீது அழுத்தங்களைச் செலுத்தி வருகின்றனர். தற்போதைய அரசாங்கம் இளைஞர்களிடமிருந்து பறித்த இளைஞர்களினது உரிமைகளை, ஜனநாயக உரிமைகளை இளைஞர்களுக்கு மீண்டும் பெற்றுத் தருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த விடயத்தில் நாம் மிகவும் முற்போக்கான, ஜனநாயக ரீதியிலான முன்னெடுப்பை நோக்கி நகர்வோம். அரசாங்கம் செய்த இந்த தவறான செயல்முறையை கைவிடாவிட்டால் இந்த மோசமான செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைவரும் எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு பதிலளிக்க வேண்டி வரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் கேசினோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முன்னேற்றம்

கொழும்பில் சமீபத்தில் திறக்கப்பட்ட “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்” கேசினோ தொடர்பாக, ஜான்...

பொரளை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மேலும் ஒரு இளைஞர் பலி

பொரளை சிறிசர உயன மைதானத்தில் கடந்த 7 ஆம் திகதி இரவு...

பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம்...

தப்பிக்க முயன்ற முக்கிய சந்தேகநபரின் கை, கால்கள் உடைவு

மேற்கு வடக்கு குற்றப்பிரிவில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது திலின சம்பத்...