வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு வெளியே பெண்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் பெண்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை தங்களால் தாங்கிக்கொள்ள முடியாது எனவும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரும் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்து ஜனாதிபதி இல்லம் முன்பாக அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.