கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு தொடர்பான முடிவை அறிவிப்பது மேலும் தாமதமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வழக்கு விசாரிக்கப்படும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக இது நிகழ்ந்ததாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
நீதிமன்றத்தின் எலக்ட்ரீஷியன் எங்கே என்று கேட்டபோது, அவர் கிரிபத்கொட பகுதிக்குச் சென்றிருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.