இருவர் உயிருக்கும் அச்சுறுத்தல்? பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

0
223

அமைச்சரவைப் பதவிகளை இழந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை தொடர்ந்தும் அனுபவிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீடிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

அமைச்சர் பதவியை இழந்த இரண்டு எம்.பி.க்களின் பாதுகாப்பை குறைக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் பிரதமரின் உத்தரவின்படி அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் மாற்றம் இல்லை.

இவ் இருவருக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினருக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பும் அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு அதிக பாதுகாப்பு உறுப்பினர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here