கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏதேனும் வன்முறை ஏற்பட்டாலோ அல்லது சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராகவோ சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாரால் அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு அமைதியின்மைக்கும் விரைவாக பதிலளிக்க கலகத் தடுப்புப் படைகள் மற்றும் கூடுதல் பொலிஸ் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போதைய உடல்நிலை காரணமாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா என்பது நிச்சயமற்றது என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிஹ தெரிவித்துள்ளார். மருத்துவ அறிக்கை சிறைச்சாலைத் திணைக்களத்திற்கு இன்னும் கிடைக்கவில்லை.
Zoom தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வந்தால், அது தொடர்பாக தேவையான வசதிகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.