ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள் சமகி ஜன பலவேகய(SJB) தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புறக்கோட்டையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம்மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தலைமையில் வந்த குழுவொன்றே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நல்லாட்சியின்போது மக்களுக்கு செய்தது” என்ன என கேள்வி எழுப்பி மேற்படி அணியினர், சஜித் அணயின் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
கோட்டையில் உள்ள தலைமை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்து பொலிசார்அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.