ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவினால் அனுப்பப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும், ஜனாதிபதி செயலகம் இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஜனாதிபதியின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய பி.பி ஜயசுந்தர தீர்மானித்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதேவேளை, இராஜினாமாவால் ஏற்படும் வெற்றிடத்திற்கு காமினி சேனாரத்ன நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் தற்போது பிரதமரின் செயலாளராக உள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றிய செனரத், ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய உறவினராவார்.