பசில் ராஜபக்ஷவை நாட்டு மக்கள் ஒன்றிணைந்து நாட்டைவிட்டு விரட்டியடிக்க வேண்டும்!

0
257

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நேற்று (10) சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேர்காணலில் கலந்து கொண்டு ராஜபக்ச குடும்பத்தை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

மேலும் பசில் ராஜபக்ச பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள வீரவன்ச, இந்த நாட்டு மக்கள் ஒன்றிணைந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷ இந்த அரசாங்கத்தை தனக்கு ஏற்றால் போன்று மாற்றிக்கொண்டார் எனவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவோ இதில் எதுவும் செய்ய முடியாது எனவும், இவை அனைத்தும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரியாமல் நடப்பதாகக் கருத முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும் ராஜபக்சக்களுடன் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், இந்த நாட்டில் குடும்ப அரசியல் ராஜபக்ச குடும்பத்துடன் முடிவுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச நீண்ட காலமாக சிரச தொலைக்காட்சியை விமர்சித்தும், அவமானப்படுத்தியும், தாக்கியும் வந்த அரசியல்வாதி. அப்போது விமல் வீரவன்ச சிரச தொலைக்காட்சியை ஏகாதிபத்திய சதியின் கைபொம்மை என்றும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அலைவரிசை என்றும், ஐதேகவின் கைப்பாவை என்றும் கூறினார்.

மேலும், விமல் வீரவன்ச அப்போது ராஜபக்சக்களை லீ குவான் யூ என்றும் மகாதீர் மொஹமட் என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here