புப்புரஸ்ஸ பகுதியில் 16 வயது மாணவி படுகொலை!

Date:

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது பாடசாலை மாணவியை கொலை செய்தார் எனக் கூறப்படும் 27 வயது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் தொழில் புரிந்த குறித்த இளைஞர் நேற்றிரவு வீடு திரும்பியுள்ளார். இவரின் காதலி எனக் கூறப்படும் குறித்த 16 வயது சிறுமி தங்கி இருந்த அறைக்கு சென்று கழுத்தறுத்து கொலை செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அதிக இரத்த கசிவு காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.

இன்று காலை கொழுந்து மடுவமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் பயன்படுத்திய தொலைபேசியும் அருகில் உடைந்த நிலையில் காணப்பட்டது.

கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை குறித்து ஆராய சிறப்புத் தேர்வுக் குழு

மாகாண சபை முறைமை மற்றும் தேர்தல்களை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக...

நாமல் – சுமந்திரன் இடையில் சந்திப்பு

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல்...

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...