எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் கையடக்க தொலைபேசி மற்றும் அவை சார்ந்த உபகரணங்களின் (accessories) விலை 30 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போது விற்பனையாளர்கள் வசமுள்ள உபகரணங்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார்.
30 வீத விலை அதிகரிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.