தமிழ் நாட்டில் போலி சாமியார்களுக்கு பஞ்சமில்லை… தெருவுக்கு தெரு இன்ஜினியரிங் கல்லூரி இருப்பது போலவே ஆன்மீக குருக்களும் முளைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலனோர் போலியானவர்களே.
மனிதனுக்கு ஏற்படும் உடலியல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை அனுபவம் வாய்ந்த பெரியோர்களிடம் கேட்டு அதற்கான தீர்வை பெறுவது என்பது பல காலமாக அனைத்து கலாச்சாரங்களிலும் இருந்து வரும் மரபு. அப்படிப்பட்ட அனுபவம் வாய்ந்த ஆன்மீக குருக்கள் எப்படி இருக்கவேண்டும் என்று இடைச்சங்க பாடல் ஒன்றில்,
“முத்திசேர சித்தியெங்கும் முன்னளிப்பேன் பாரென,
சத்தியத்தை சொல்லியர்யெங்கும் சாமிவேடம் பூண்டவர்,
நித்தியம் வயிரு வளர்க்க நீதி ஞானம் பேசியே,
பத்தியாய் பணம் பறித்து பாழ்நரகில் வீழ்வரே. “
அதாவது உன் சித்திக்கு இப்போதே முக்தி அளிக்கிறேன் பார் என்று கூறி சாமி வேடம் போட்டுக் கொண்டு நீதி, ஞானத்தை பற்றியெல்லாம் பேசி பணம் பறிப்பவர் பாழ் நரகத்தில் போய் தான் விழுவார் என்பது இப்பாடலின் விளக்குமாகும்.
கல்வி, மருத்துவம் போன்று ஆன்மீகமும்.. பணம் கொழுக்கும் ஒரு தொழிலாக மாறிவிட்டதால் இப்படி உபதேசங்களுக்கு பணம் பறிக்கும் சாமியார்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அப்படி மதத்தை கேடயமாக வைத்துக்கொண்டு பல மானம்கெட்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நித்தியானந்தா, கல்கி சமீபத்தில் பாலியல் வழக்கில் கைதான நானு பாபா போன்றோர். இப்போது அந்த பட்டியலில் முன்னதாகவே மானங்கெட்ட தொழிலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் தற்போது புதிதாக கடவுள் அவதாரம் எடுத்துள்ளார்.
அன்னபூரணி அரசு அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் பெண் ஒருவரை பொதுமக்கள் பக்தி பரவசத்தோடு கத்திக்கொண்டும், கதறிக்கொண்டும் பூஜை செய்யும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பயங்கர டிரெண்டாகி வருகிறது.
யார் இந்த புது பெண் சாமியார் என்று பலர் ஆர்வமுடன் தேடிவந்த நிலையில் இணையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில், இப்போது அண்ணையின் அவதாரம் என்று சொல்லிக்கொள்ளும் அன்னபூரணி அடுத்தவர் கணவனுக்கு ஆசைப்பட்டு அழுது புலம்பிய வீடியோவை நெட்டிசென்கள் கண்டுபுடித்து எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன், இதுதாண்டா நிஜ வளர்ச்சி என்றெல்லாம் சொல்லி கலாய்த்து அன்னை அன்னபூரணியை கலாய்த்து வருகின்றனர்.
அந்த நிகழ்ச்சியில் திருமணமாகி குழந்தைகள் இருந்த ஒருவருடன் விவாகரத்து பெறாமல் சட்டவிரோதமாக குடும்பம் நடத்தி வந்ததாக அன்னை அன்னபூரணி மீது அவரின் கள்ளக்காதலர் குடும்பத்தினர் புகார் எழுப்பியிருந்தார். அந்த பிரச்சனைக்கு பஞ்சாயத்து செய்து வைத்திருந்த லட்சுமி ராமகிருஷ்ணன். சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்திருந்த நேர்காணலில்.
“அன்னபூரணி குறித்த வீடியோக்களை நான் பார்த்தேன். எனக்கும் அந்த வீடியோவை அனுப்பி இருந்தார்கள். சில வருடங்களுக்கு முன் இந்தப் பெண் என்னுடைய நிகழ்ச்சிக்கு வந்தபோது சட்டவிரோதமாக இன்னொருவரின் கணவருடன் குடும்பம் நடத்துவது தவறு என அறிவுரை வழங்கி நான் அனுப்பி வைத்தேன்.
ஆனாலும், எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவர் அப்படி தான் வாழ்வேன் என்று சொல்லி விட்டுப் போனார். அதற்கு பிறகு எந்த தொடர்பும் கிடையாது. அதன்பிறகு இப்போது இவரின் இந்த தீடீர் அவதாரத்தை எல்லாம் பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது.
ஆனால், மக்கள் இப்படி போலி சாமியார்களை கண்டு ஏமாந்து போகிறார்கள் என்பதை நினைத்து எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. மேலும், நான் அன்னபூரணியின் கடந்தக்கால வாழ்க்கை பற்றியோ, அவர் நடத்தை குறித்தோ எதையும் விவாதிக்க விரும்பவில்லை. அது அவருடைய தனிப்பட்ட விஷயம். ஆனால், இதுபோன்ற கடவுளின் அவதாரம் என்று சொல்லிக்கொண்டு மக்களை காலில் விழவைப்பது தவறான விஷயம், முட்டாள்தனம். இந்த மாதிரி போலி சாமியார்களை சாமி என்று சொல்லி மக்கள் நம்புவது பரிதாபமாக இருக்கிறது. எத்தனை நாட்கள் ஏமாறுவதற்கு நாம் ரெடியாக இருக்கிறோமோ? அது வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்” என தெரிவித்திருந்தார்.
இப்படி கள்ளகாதலியாக இருந்த அன்னபூரணி எப்படி கடவுள் அவதாரம் எடுத்தார்கள் என்று பலர் குழம்பி வருகின்றனர். இவர் முன்னதாகவே திருமணமாகி 15 வயது மதிக்கத்தக்க பெண் இருந்த ஒரு அரசு என்ற நபருடன் தான் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார். தற்போது அன்னபூரணி அரசு அம்மா என்று தனது பெயரையும் கள்ளக்காதலன் பெயரையும் இணைத்து ஒரு புது சாமியாராக தோன்றியுள்ளார். இவருக்கு இவர் கள்ளக்காதலன் மீதுள்ள அதீத அன்பை காட்டுகிறது. இத்துடன் இந்த காணொளியில் வரும் பலர் பணத்தை வாங்கிக்கொண்டு கோஷம் போட வந்த கும்பல் போல் தான் தெரிகிறதே தவிர பக்தியில் வந்த கூட்டம் போல் தெரியவில்லை. இவ்வளவு செலவு செய்து வெட்டி விளம்பரம் ஏன் செய்ய வேண்டும்.. இல்லை இவர்களுக்கு பின்னல் யாரேனும் இருக்கிறார்களா என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுகிறது.
எது எப்படி இருப்பினும் சட்டவிரோதமான செயலில் ஈடுபடும் வரை காவல் துறையால் இவரை கைது செய்ய முடியாது என்று தைரியமாக செயல்பட்டு வந்த அவரை தற்போது பொய் கூறி மக்களை ஏமாற்றி வந்த குற்றத்திற்காக காவல் துறை இவரின் தரிசன நிகழ்ச்சி அனைத்திற்கும் தடை விதித்து தீவிரமாக தேடி வருகிறது.
எப்படி நித்தியானந்தா காவல் துறையை ஏமாற்றி தனக்கென ஒரு தேசத்தை தொடங்கி குதூகலித்து வருகிறாரோ இவரும் அதே போல் செய்து விடுவாரோ என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி இல்லையெனில் பராசக்தியின் அவதாரமான இவர் சிவனின் அவதாரமான நித்தியானந்தாவுடன் ஒரு சேர இணைவதற்கும் கூட வாய்ப்புகள் உள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.