வரையறுக்கப்பட்ட கட்டுகம்பல பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் பொதுச் சபைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், தேசிய மக்கள் சக்தி (NPP) கடும் தோல்வியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தேர்தலில், சமகி ஜன பலவேகயை (SJB) முன்னணியாகக் கொண்ட ஐக்கிய எதிர்க்கட்சி 113 உறுப்பினர் பதவிகளை கைப்பற்றியுள்ளதுடன், தேசிய மக்கள் சக்தி அணிக்கு கிடைத்தது வெறும் 6 உறுப்பினர் பதவிகள் மட்டுமே என கூறப்படுகிறது.
கட்டுகம்பல பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் பொதுச் சபைக்கு மொத்தமாக 133 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்த நிலையில், சில பிரிவுகளில் வாக்கெடுப்பு நடைபெறாத காரணத்தால், நேற்று நடைபெற்ற தேர்தலில் மொத்தமாக 119 உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
