இலங்கையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு

0
30

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாக பதிவாகியுள்ளது. 

கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 4.2 சதவீதமாக பதிவாகியிருந்ததாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது கடந்த 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 3.8 சதவீதமாக இருந்ததை விட 0.5 சதவீதம் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பெண்களின் வேலையின்மை ஆண்கள் வேலையின்மையை விட இரண்டு மடங்கு அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதற்கமைய, பெண்களின் வேலையின்மை விகிதம் 19.2 வீதமாக காணப்பட்டதாகவும் குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here