கடந்த அரசாங்க காலத்தில் உயர்மட்ட அரச அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மூலம் அவர் கைது செய்யப்படுவார் என அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
முன்னாள் சக்திவாய்ந்த அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அரச நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே, இந்த அதிகாரி கைது செய்யப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
