பஸ் கவிழ்ந்து சாரதி பலி

Date:

கொழும்பில் இருந்து வெளிமடைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று காலை (18) 6.30 மணியளவில் வளைவு எடுக்க முற்பட்ட போது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு பதுளை வீதியில் களுபஹன பாடசாலைக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் ஆலடித்தன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக தியதலாவ பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சாரதியின் சடலம் தற்போது ஆலடித்தன்ன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹல்துமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...