அலவ்வ, மொரவலபிட்டிய, கொடாகூருவ பகுதியில் நேற்று (17) இரவு இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் நாரம்மல, மடியகனே பகுதியில் வசித்து வந்த 30 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், அவர் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக முன்பு பல குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
