சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க (இளையவர்) அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை (Impeachment) முன்வைப்பது தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலும் தற்போது அரசுக்குள் நடைபெறவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கேள்வி –
“அமைச்சரே, சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை கொண்டு வர அரசின் தரப்பில் ஏதேனும் யோசனை உள்ளதா? ஏனெனில் 21ஆம் தேதி ஒரு போராட்டமும் நடைபெற உள்ளது…”
பதில் –
“அத்தகைய விஷயம் தற்போது விவாதிக்கப்படவில்லை. இதைப்பற்றி விரிவாக கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், நீங்கள் காணும் நிகழ்வுகள் குறித்து நாங்களும் கவனமாக இருப்பதாக மட்டும் கூற முடியும்.”
இந்த கருத்தை அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், நேற்று (20) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுந்த கேள்விக்கு பதிலளிக்கும்போது தெரிவித்தார்.
