நாட்டு மக்களின் பிரச்சினைகளை தாம் நன்கு புரிந்து கொண்டு அவற்றை ஒவ்வொன்றாக தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது நாட்டிற்கு மிகவும் கடினமான நேரம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒருபுறம் நாம் கொரோனா தொற்றுநோயை சமாளிக்க வேண்டும் நாங்கள் அதை மிகவும் வெற்றிகரமாக எதிர்கொண்டோம் .
நாம் மாற்று பொருளாதார அழுத்தங்களின் யுகத்தில் வாழ்கிறோம். எவ்வாறாயினும் அரசாங்கம் என்ற ரீதியில் மக்களுக்கு அனைத்து விதமான நிவாரணங்களையும் வழங்குவதை அரசாங்கத்தின் பொறுப்பாக கொண்டுள்ளது .
குறிப்பாக ஒரு கிராமம் அல்லது ஒரு பகுதியின் வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொன்றாக முறையாக அபிவிருத்தி செய்வதே எங்கள் நோக்கம் உங்கள் பிரச்சனைகளை புரிந்து கொண்ட வர்கள் நாங்கள்.
மக்களின் தேவைகளை இனங்கண்டு கொண்ட ஒரு குழுவே இன்று நாட்டை ஆள்கிறது. ஆனால் எல்லாவற்றையும் ஒரு நாள் ஒரு மணிநேரத்தில் ஒரு வருடத்தில் செய்துவிட முடியாது.
ஆனால் ஒவ்வொன்றாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கு உங்கள் ஆதரவு தேவை என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவூட்ட வேண்டும்.
கொலன்னாவில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.