சுரேஸ் சாலே கைது! ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு?

Date:

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் சுரேஸ் சாலே சற்றுமுன் சிஐடியினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் பெயரைத் தொடர்புபடுத்தி பிரித்தானியாவின் ‘சனல் 4’ தொலைக்காட்சி 2023ஆம் ஆண்டு ஒரு விசேட ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது.

ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்த பிள்ளையானின் செயலாளராகப் பணியாற்றிய ஹன்சீர் அசாத் மௌலானா என்பவரே இத்தொடர்பு குறித்து வெளிப்படுத்தியிருந்தார்.

இதேநேரம் இதற்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில், சுரேஷ் சாலே இராணுவப் புலனாய்வுப் பணிப்பகத்தின் தலைவராகக் கடமையாற்றியிருந்தார்.

எவ்வாறாயினும், 2024 நவம்பரில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் அவர் உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...