ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவு

Date:

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடரில் ஒரு தாக்குதல் இடம்பெற்ற தெமடகொட பகுதியில் உள்ள வீட்டில் வசித்த இரண்டாவது சந்தேக நபரான இப்ராஹிம் இல்‌ஹாம் அஹ்மத் என்பவரின் இல்லத்தில் இருந்து குற்றப்புலனாய்வு துறை (CID) கைப்பற்றிய தங்க நகைகள், ரத்தினங்கள் உள்ளிட்ட சொத்துகளை, அவரின் சகோதரரான இஃப்லால் அஹ்மத் என்பவருக்கு ஒரு வாரத்திற்குள் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் இஸுரு நெத்திகுமார நேற்று (25) CIDக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு அன்று செங்ரிலா ஹோட்டலில் குண்டுத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த இப்ராஹிம் இல்‌ஹாம் அஹ்மத், தெமட்டகொட வீட்டில் வெடித்த குண்டில் உயிரிழந்த இன்ஷாஃப் அஹ்மத் ஆகியோரின் சகோதரருமான இஃப்லால் அஹ்மத், மேலும் அந்த வெடிப்பில் உயிரிழந்த இன்ஷாஃப் அஹ்மத்தின் மனைவி ஜிப்ரி பாத்திமாவின் மைத்துனருமான இவர், குறித்த பொருட்கள் தமக்குச் சொந்தமானவை எனவும் அவற்றை விடுவிக்குமாறும் வழக்கறிஞர் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையை பரிசீலித்தே நீதவான் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

“இந்த உத்தரவை வழங்குவதற்கு முன்பு, முந்தைய நீதவான் CIDக்கு எதிர்ப்பு தெரிவிக்க நியாயமான கால அவகாசம் வழங்கியிருந்தார். ஆனால் எந்த காரணமும் முன்வைக்கப்படவில்லை. மேலும், அதே நீதிமன்றத்தில் முன்னர் இடம்பெற்ற விசாரணையின் போது, பொருட்களின் உரிமை குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அறிக்கை கோரப்பட்டிருந்த உத்தரவைப் பொருட்படுத்தாமல் CID செயல்பட்டுள்ளது.

எனவே, ஒரு வாரத்திற்குள் குறித்த பொருட்களை கோரிய தரப்புக்கு விடுவிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக CIDக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்,” என நீதவான் தெரிவித்துள்ளார்.

மேலும், நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்ட பின்னரும் அதனை அமல்படுத்தாமல் சட்டமா அதிபரின் ஆலோசனை கோரியது தவறான நடவடிக்கையாகும் எனவும் நீதவான் வலியுறுத்தினார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக வழக்கை வரும் ஜூன் 17ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...