பஸ் கட்டணம் உயரும்

0
28

புதிய பேருந்து பயண கட்டண விபரங்கள் இன்றைய தினம் வெளியிடப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா இதனைத் தெரிவித்துள்ளார்.

டீசல் விலை உயர்வைக் கருத்திற் கொண்டு மாற்றிமைக்கப்பட்ட புதிய கட்டண திருத்தம் இன்றைய தினத்திற்குள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

அண்மையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்ட போதிலும், டீசல் விலை அதிகரிப்புக்கு எதிராக பேருந்து கட்டணங்களை உடனடியாக அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எவ்வித நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.

எனினும், போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற் கொண்டு புதிய தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here