இன்றைய வானிலை

0
214

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இடைக்கிடையாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் கடலோர பகுதிகளிலும், குறிப்பாக புத்தளம் மாவட்டத்திலும் காலை நேரங்களில் சிறிய அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சபரகமுவ மாகாணத்திலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சபரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் வாய்ப்பும் உள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here