ஜனாதிபதி-பிரதமருக்கு மட்டுமே ஹெலிகொப்டர்பயன்படுத்த முடியும் – இலங்கை விமானப்படை

Date:

பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை இடைநிறுத்த இலங்கை விமானப்படை தீர்மானித்துள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளின் விஜயங்களுக்கு ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்களை வழங்குவதற்கு இலங்கை விமானப்படைக்கு பொறுப்பு இருப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது விமானப் பயணத்துக்காக இதுவரை 10 மில்லியன் ரூபாவுக்கு மேல் விமானப் படைக்கு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு ஹெலிகாப்டர் ஒரு மணி நேரத்துக்கு சுமார் ஐநூறு லீற்றர் எரிபொருளை பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...

அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64...

இலங்கை மத்திய வங்கி யின் உத்தரவு

இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது மாதாந்த வருமானத்தில்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....