வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

0
349

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த 2015ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கில், ‘சுவிஸ் குமார்’ உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று (06) உறுதிப்படுத்தியுள்ளது.

தங்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீடுகளை விசாரித்த, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here