அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

Date:

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000 அமெரிக்க டொலருக்கும் அதிக பணம், இரண்டு சந்தர்ப்பங்களில் மூன்றாம் தரப்பு ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று (06) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 

மூன்று போலி மின்னஞ்சல்கள் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தபால் திணைக்களம் இந்தப் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

தபால் திணைக்களம் மேற்கொண்ட வெளிநாட்டுச் செலுத்துகை ஒன்று உரிய தரப்பினருக்குக் கிடைக்காமை தொடர்பான வழக்கின் விசாரணை நேற்று கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் முதன்முறையாக எடுத்துக்கொள்ளப்பட்டது. 

சர்வதேச தபால் பணிகளுக்கான கொடுப்பனவு விபரங்களை ‘Universal Postal Union’ (UPU) எனும் உலகளாவிய தபால் ஒன்றியம் வழங்குகிறது. 

எனினும், இந்த விவகாரத்தில் அவர்கள் வழங்கிய உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு மாறாக, வேறொரு மின்னஞ்சல் முகவரியுடன் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

அமெரிக்க தபால் சேவைக்கு செலுத்த வேண்டிய பணம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என 2023 ஜூன் முதல் 9 போலி மின்னஞ்சல்கள் ஊடாக தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. 

அவற்றில் மூன்றிற்கு தபால் திணைக்களம் பதிலளித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர். 

2025 பெப்ரவரி 19 அன்று 435,864 அமெரிக்க டாலர்களும், 2025 ஒக்டோபர் 16 அன்று 190,891 அமெரிக்க டொலர்களும் தபால் திணைக்களத்தினால் மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். 

இதன்படி 626,755 அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பு ஒன்றிற்குச் சென்றுள்ளது. 

இந்தப் பணம் சென்றடைந்த குறிப்பிட்ட நபர் அல்லது தரப்பு குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. 

எனினும், தண்டனைச் சட்டம், கணினி குற்றச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக தௌிவாவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 

விசாரணை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், தபால் திணைக்களத்தின் மின்னஞ்சல் கட்டமைப்பை கள ஆய்வு செய்வதற்கு இலங்கை கணினி அவசர தயார்நிலை பிரிவிற்கு அனுமதி வழங்கினார். 

இந்த வழக்கை மீண்டும் ஜூலை 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...