மக்கள் வரிசையில் நிற்கிறார்கள், ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – CPC தலைவர்

Date:

பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் காணப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். மக்கள் தேவையில்லாமல் எரிபொருளை சேமித்து வைப்பதே வரிசையில் நிற்பதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவான மக்கள் கூட்டம் காணப்படுவதனால் எரிபொருள்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் அந்த வரிசைகள் முடிவுக்கு வரும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஐஓசியின் எரிபொருள் விலை அதிகரிப்பும் எரிபொருள் வரிசைக்கு மற்றொரு காரணம். இதன் காரணமாக IOC வாடிக்கையாளர்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்தும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வருவதாகவும் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொள்கிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரமாண்ட சொகுசு வீடு! விசாரணை செய்யுமாறு பொலிசில் முறைப்பாடு!!

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவினால் கடுவெல,...

உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை...

பிள்ளையான் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு...

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...