இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூபா 200,000 ஐ தாண்டியுள்ளது.
கொழும்பு செட்டியார் தெரு தங்க ஆபரணக் கடைகளில் இந்த விலைகள் பதிவு செய்யப்பட்டு வருவதுடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூபா 190,000ஐத் தாண்டியுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள பழைய நகைகளைக் கொடுத்துவிட்டு, அதில் புதிய நகைகளை உருவாக்குவதாக கடை உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை செட்டியார் தெரு தங்க நகைக்கடைகளில் தங்கத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.