டீசல் இல்லாமை காரணமாக பெரும்பாலான தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதடைந்துள்ளது.
மின்சாரம் தடைப்படும் சந்தர்ப்பங்களில், மின்பிறப்பாக்கிகளின் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்ட போதிலும், மின்பிறப்பாக்கிகளுக்கு தேவையான டீசலை பெற்றுக்கொள்ள முடியாமையினால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ள தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, தேயிலை தொழிற்சாலைகளுக்கு தேவையான டீசலை பெற்றுக்கொடுக்க பெற்றோலிய கூட்டுதாபனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ரவிந்திர ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார்.