பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு

Date:

பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் ஏனைய அமைச்சுக்களில் உள்ள ஏனைய அதிகாரிகளை வீட்டிலிருந்தே தமது கடமைகளை செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுத்து எரிபொருளை சேமிப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“எங்கள் நாடு முன்னொருபோதுமில்லாத சவாலை எதிர்கொண்டுள்ள நேரத்தில், எரிபொருளை சேமிப்பதன் ஒரு படியாக வீட்டில் இருந்தபடியே தங்கள் பணிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் மற்றும் எனது அமைச்சக அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.

“மின்வெட்டுக்கு மத்தியிலும், இந்த அதிகாரிகள் தங்களால் இயன்ற வரையில் தங்கள் பணிகளைச் செய்து வருவதை நான் நன்றியுடன் ஒப்புக்கொள்கிறேன்.”ஒரு அரசாங்கமாக, இந்த நெருக்கடியின் விளைவாக மக்களின் நிலை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இந்த சவால்களை கடக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துக் கொள்கிறேன்.

“பல இடர்பாடுகள் இருந்தபோதிலும், மக்களின் பொறுமையுடனும் மற்றும் ஆதரவுடனும் முப்பது வருட பயங்கரவாதம், கொவிட் கொள்ளைநோய் உட்பட பல சவால்களை வெற்றிக் கொண்ட வரலாற்றை நாம் கொண்டுள்ளோம். இந்தச் சவாலையும் அதே வழியில் முறியடிக்க தாய்நாட்டின் பெயரால், அனைத்துப் பிரிவினைகளையும் மறந்து கைகோர்ப்போம்.”

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...

ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (23)...

ரணில் நியமித்த ஆளுநருக்கு அழைப்பாணை

2015ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி மோசடி...

இது பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட முன்னாள்...