கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம் 2026 மே மாதத்தில் 5.5% ஆக உயர்ந்துள்ளது. இது 2026 ஏப்ரல் மாதத்தில் பதிவான 5.4% இலிருந்து சற்றே அதிகரித்ததாகும்.
மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவலின்படி, உணவுப் பொருட்கள் பிரிவின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் பதிவான 2.8% இலிருந்து மே மாதத்தில் 0.9% ஆகக் குறைந்துள்ளது.
எனினும், உணவு அல்லாத பொருட்கள் பிரிவின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் பதிவான 6.8% இலிருந்து மே மாதத்தில் 7.8% ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
