ஜனாதிபதியை வீட்டுக்கு செல்லுமாறு வலியுறுத்தி கொழும்பு விஜயராம பகுதியில் பந்தம் ஏந்தி ஒரு குழுவினர் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பு தாமரை தடாகம் சந்தியில் இருந்து விஜயராம பகுதிவரை பந்தம் ஏந்தி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் விஜயராம பகுதியில் வசித்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.