ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு கோரி இளைஞர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக காலி முகத்திடலுக்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காலி முகத்திடலுக்கு அருகாமையிலும் ஜனாதிபதி செயலகத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.