ஜெய்பீம் பட ஹீரோவுடன் ஜோடிபோடும் லாஸ்லியா

Date:

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தற்போது ‘அன்னபூர்ணி’ என்ற படத்தில் நடிக்கிறார். இவருடன் ஜெய்பீம் படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த லிஜோமோல் ஜோஸ், நடிக்கிறார். மேலும் இவர்களுடன் மெட்ராஸ், ரைட்டர் படங்களில் நடித்த ஹரி கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கே.எச்.பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ஓடிஓ பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இணைந்து தயாரிக்க, லயோனல் ஜோசுவா இப்படத்தை இயக்குகிறார்.
திரில்லர் டிராமாவாக உருவாகும் அன்னபூர்ணி படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பிரபல பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்திற்கு வசனங்களும் பாடல்களும் எழுதுகிறார். சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...