12 கோடி இலஞ்ச வழக்கு: சாகலவுக்கும் தொடர்பு?

Date:

பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக் கட்டாவை தடுப்புக் காவலில் இருந்து நீக்கி, சாதாரண சிறைக்கு மாற்றித் தருவதாகக் கூறி அவரது மனைவியிடமிருந்து ரூ.12 கோடி இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் பிரதான பணியாளர் மற்றும் தேசிய பாதுகாப்புக்கான மூத்த ஆலோசகராக இருந்த சாகல ரத்நாயக்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தகவல், விசாரணையின் போது ஹேரத் முதியன்சேலாகே கோனகெதர நிர்மாண இந்திரஜித் பண்டார எனப்படும் “ஹர்பி” வழங்கிய வாக்குமூலத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த வாக்குமூலத்தில், துபாயில் ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க ஆகியோரை சந்தித்தபோது, ஹரக் கட்டாவுக்கான நடவடிக்கைகள் குறித்து அவர்கள் பேசியதாகவும், அப்போது அவர்கள்,

“சிந்தகவை கொல்லும் திட்டத்தை ஏற்கனவே நிறுத்தி, அவருக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளோம். அதற்காக கட்டாயம் ரூ.5 கோடி (500 இலட்சம்) தேசபந்து தென்னகோன் அவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், மூன்று மாதங்களுக்குள் சிந்தகாவின் தடுப்புக் காவல் உத்தரவை நீக்க வேண்டும். அதற்காக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க அவர்களுக்கு ரூ.5 கோடி வழங்க வேண்டும். அவர் நேரடியாக பணம் வாங்க மாட்டார்; வேறு முறையில் அதை செய்வோம். சாகல ரத்நாயக்க அவர்களின் ஊடாக அந்த வேலையை முடித்துவிடலாம்” என்று தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இந்த வாக்குமூலம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் விசாரணையின் ஒரு பகுதியாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமே; அவை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல. இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையில் 50 பேரில் ஒருவருக்கு போதைப்பழக்கம்

இலங்கையில் 50 பேரில் ஒருவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக மகளிர், சிறார்...

இலங்கையில் 12 மில்லியன் மக்கள் வரி செலுத்துவதாக தகவல்

இலங்கையில் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வரி செலுத்துவோர் அடையாள...

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி...