– ஜூலை 6 முதல் அமல்
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நாடளாவிய பேருந்து கட்டணங்களை திருத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் வரும் ஜூலை 6 (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன.
புதிய கட்டணத் திருத்தத்தின் படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.30 இலிருந்து ரூ.34 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 100 கிலோமீட்டர் வரை பயணிக்கும் வழித்தடங்களுக்கான கட்டணங்கள் 12% உயர்த்தப்பட்டுள்ளன. 100 கிலோமீட்டருக்கு மேற்பட்ட பயணங்களுக்கான கட்டணங்கள் 20% அதிகரிக்கப்படுகின்றன.
ஆடம்பர (Luxury) பேருந்து சேவைகளிலும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, 100 கிலோமீட்டருக்குக் குறைவான வழித்தடங்களுக்கு 12% மற்றும் 100 கிலோமீட்டருக்கு மேற்பட்ட வழித்தடங்களுக்கு 15% கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
பயணிகள் போக்குவரத்து சேவைகளின் செயல்பாட்டு செலவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு இந்த கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
