முழு ராஜபக்ச குடும்பமும் மாட்டும்!

0
22

தற்போதைய அரசு முன்னெடுத்து வரும் ஊழல்வாதிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் எந்தவித தாமதமும் இல்லை என தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கேள்வி: ஊழல்வாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதா?

அதற்கு பதிலளித்த அவர்,

“எந்தவித தாமதமும் இல்லை. ஏற்கனவே பலர் சிறையில் உள்ளனர். எதிர்வரும் காலத்தில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலர் நீதிமன்றம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றில் முன்னிலையாக வேண்டியுள்ளது. அந்த நடவடிக்கைகள் அனைத்தும் நீதித்துறை நடைமுறைகளின் கீழ் ஒழுங்காக நடைபெறும்,” என்றார்.

தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் நடைபெற்ற பொசோன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க இதனை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here