10 கோடி பெறுமதி கோகெய்ன் பறிமுதல்

0
21

துபாயிலிருந்து இலங்கைக்கு வந்த 23 வயதுடைய மலேசியப் பிரஜை ஒருவர், சுமார் ரூ.10 கோடிக்கு நெருங்கிய மதிப்புள்ள கோகெய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், சாக்லேட் பாட்டில்களுக்குள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 92 போதைப்பொருள் காப்சூல்களை நாட்டிற்குள் கடத்த முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுங்கத் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைப்பற்றிய இந்த கோகெய்ன் தொகையின் மொத்த எடை 1 கிலோ 816 கிராம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டு நபரும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக போலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here