இந்த ஆண்டில் ஜூலை 20 ஆம் திகதி வரை நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 77,028 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்ததன்படி, டெங்கு காய்ச்சலால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் தற்போது 162 டெங்கு அதிக ஆபத்து வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதிகளவு நோயாளிகள் மேற்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு மட்டும் 40,573 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது அதிகளவு நோயாளிகள் தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 11,867 பேர் டெங்கு நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜூலை மாதத்தின் முதல் 20 நாட்களிலேயே 21,650 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது இதுவரை ஒரே காலப்பகுதியில் பதிவான மிக அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளிகள் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, கடந்த ஜூன் மாதத்தில் 21,537 டெங்கு நோயாளிகள் பதிவாகியிருந்தமைவும் குறிப்பிடத்தக்கது.
