இன்று (25) காலை ஐக்கிய மக்கள் சக்திக்கு சுயாதீன நாடாளுமன்றக் குழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ரஞ்சித் மத்தும பண்டார, எஸ்.எம். மரிக்கார், டொக்டர் ராஜித சேனாரத்ன, டொக்டர் ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, கயந்த கருணாதிலக ஆகியோர் கலந்துகொண்டனர்.
விமல் வீரவன்ச மற்றும் சுயாதீனக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் குழுவினர் கலந்துரையாடலில் இணைந்துள்ளனர்.
இதன்போது அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இடைக்கால அரசாங்கம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் சில தினங்களில் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.