12.5 கிலோ கிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (26) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
12.5 கிலோ எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 4,860 ஆக மாற்றியமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் இன்று முற்பகல் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
தொடர்ச்சியான விநியோகத்திற்காக எரிவாயுவின் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
காஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றியமைப்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.