நாட்டு மக்களின் மனசாட்சியில் இன்று ரணில் மாத்திரமே பிரதமர்!

0
153

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றக்கூடிய ஒரே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்பதை நாட்டின் பெரும்பான்மையான மக்களின் மனசாட்சி இன்று ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மகாசங்கத்தினர், அறிஞர்கள், தொழில் வல்லுனர்கள், கிராம மக்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்கள் ஆனால் துரதிஷ்டவசமாக நாட்டில் இதை வெளிப்படையாகக் கூறத் தயங்குகிறார்கள் என்றும் பிரதித் தலைவர் கூறினார்.

உலக பணவீக்க சுட்டெண்ணில் இலங்கையை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வந்ததே தற்போதைய அரசாங்கம் மூன்று வருடங்களில் சாதித்துள்ள ஒரேயொரு சாதனை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here