அசோக ரன்வல மீண்டும் சபாநாயகர் பதவிக்கு?

0
194

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திவெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, முதலில் சபாநாயகராக அசோக ரன்வல நியமிக்கப்பட்டார்.

எனினும், அவரது கலாநிதிப் பட்டம் தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அவர் குறுகிய காலத்திலேயே சபாநாயகர் பதவியில் இருந்து விலகினார்.

தனது பதவி விலகல் கடிதத்தில், தனது கலாநிதிப்பட்டத்திற்கான சான்றிதழை விரைவில் பொதுமக்களுக்கு வெளியிடுவதாக அசோக ரன்வல குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இதுவரை அந்தச் சான்றிதழ் பகிரங்கப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

LNW-க்கு கிடைத்த தகவல்களின்படி, இதற்குக் காரணம் அவர் கலாநிதிப் பட்டம் படிக்காதது அல்ல எனக் கூறப்படுகிறது. மாறாக, குறித்த பட்டச் சான்றிதழ் அவரது இயற்பெயரான அசோக சபுமல் ரன்வல என்ற பெயரில் இல்லாமல், அவர் ஜப்பானில் துறவறம் மேற்கொண்டிருந்த காலத்தில் பயன்படுத்திய பௌத்த துறவி பெயரில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1988/89 காலப்பகுதியில் ஏற்பட்ட வன்முறைச் சூழ்நிலையின்போது உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அசோக ரன்வல ஜப்பானுக்குச் சென்றதாகவும், அங்கு பௌத்த துறவியாக இருந்தபோது கல்வி கற்றதாகவும் அந்தத் தகவல்கள்தெரிவிக்கின்றன. இதனால், ஜப்பானில் அவர் பெற்றகல்விச் சான்றிதழ்கள் அவரது தற்போதைய பெயரில் இல்லாமல் துறவறப் பெயரில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பட்டச் சான்றிதழ் தொடர்பான சர்ச்சை எழுந்தபோது, அரசாங்கத்திற்கு மேலும் அரசியல்நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவர் சபாநாயகர் பதவியில் இருந்து விலகியதாகவும்தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவை நியமித்தது. தற்போது அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினாலும் விசாரணை முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், நாடாளுமன்றத்தில் அவரது செயற்பாடுகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன.

இந்த நிலையில், ஜகத் விக்ரமரத்னவுடன் ஒப்பிடுகையில்முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல சிறந்தவர் என்றகருத்துக்கு எதிர்க்கட்சிகள் வந்துள்ளதாக அரசியல்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, எதிர்காலத்தில் சபாநாயகர் பதவி மீண்டும்வெற்றிடமானால், அசோக ரன்வலவை மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிப்பதற்கு தங்களுக்கு எந்தவித எதிர்ப்பும்இல்லை என எதிர்க்கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here